Editorial / 2017 ஓகஸ்ட் 24 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான ஷஹிட் அப்ரிடி, இங்கிலாந்தின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான நற்வெஸ்ட் இ20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிப் போட்டியில், அதிரடியான சதத்தைப் பெற, அவரது அணியான ஹம்ப்ஷையர் அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
டேர்பிஷையர் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டேர்பிஷையர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஹம்ப்ஷையர் அணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அப்ரிடி, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிச் சதம் பெற, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை, அவ்வணி வெற்றது.
இருபதுக்கு-20 போட்டிகளில், தனது முதலாவது சதத்தை, அப்ரிடி பெற்றார். அவரது சதத்துக்கு, வெறுமனே 42 பந்துகளை மாத்திரம் அவர் எடுத்துக் கொண்டமை, இங்கு முக்கியமானதாக அமைந்தது. அவர், அடுத்த பந்திலேயே 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தவிர, அணித் தலைவர் ஜேம்ஸ் வின்ஸ் 55 (36), ஜோர்ஜ் பெய்லி 27 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மற் கிறிற்ச்லி 3, பென் கொட்டன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
250 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய டேர்பிஷையர் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 101 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் பென் கொட்டன் 30 (21) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், கைல் அபொட், லியம் டவ்ஸன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், மேஸன் கிறேன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, ஷஹிட் அப்ரிடி தெரிவானார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago