Shanmugan Murugavel / 2016 மே 10 , மு.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரான அன்டி மறே, இரண்டு வருடங்களின் பின் தனது பயிற்சியாளர் அமேலி மௌரஸ்மோவிடமிருந்து பிரிந்துள்ளார்.
மௌரஸ்மோவிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டதாக தெரிவித்த 28 வயதான மறே, எனினும் தங்களது இணைப்பை முடித்துக் கொள்ள இருவரும் பரஸ்பரம் இணங்கியதாக தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு மௌரஸ்மோவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய பின்னர், முதற்தடவையாக களிமண் தரையில் வென்ற இரண்டு பட்டங்களை உட்பட ஏழு பட்டங்களை வென்றபோதும் மறே ஏற்கெனவே வென்ற இரண்டு கிரான்ஸ்லாம் பட்டங்களுக்கு பிறகு வேறு எதையும் வென்றிருக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் தனது முதலாவது குழந்தைக்கு தாயான 36 வயதான மௌரஸ்மோ, இரண்டு வருடங்களாக மறேயுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், இவான் லென்டிலால் பயிற்சியளிக்கப்பட்டிருந்த மறே, அவரது பயிற்சியின் கீழே 2012ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க பகிரங்கப் பட்டத்தையும் 2013ஆம் ஆண்டு விம்பிள்டனையும் வென்றிருந்தார்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026