Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 16 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா தடுமாறுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில் பிறிஸ்பேணில் சனிக்கிழமை (14) ஆரம்பித்த இப்போட்டியின் இன்றைய மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 405 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஆகாஷ் டீப்பிடம் எஞ்சிய விக்கெட்டுகளை இழந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 445 ஓட்டங்களைப் பெற்றது. அலெக்ஸ் காரி 70 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, மழையால் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நாளில் மிற்செல் ஸ்டார்க் (2), ஜொஷ் ஹேசில்வூட், அணித்தலைவர் பற் கமின்ஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றது. களத்தில் லோகேஷ் ராகுல் 33 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் றோஹித் ஷர்மா ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
4 hours ago
8 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
31 Mar 2026
31 Mar 2026