2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவை வென்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 12 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, டேவிட் வோர்னரின் 39 (33), பின்ஞ்சின் 29 (20), கிளென் மக்ஸ்வெல்லின் 16 (09), ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டமிழக்காத 37 (27), மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் 38 (23), மத்தியூ வேட்டின் ஆட்டமிழக்காத 13 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மகேஷ் தீக்‌ஷன 4-0-25-2, சாமிக கருணாரத்ன 3-0-19-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 177 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக தனுஷ்க குணதிலக 15 (12), பதும் நிஸங்க 27 (25), சரித் அஸலங்க 26 (19), பானுக ராஜபக்‌ஷ 17 (13) ஓட்டங்களைப் பெற்றபோதும் ஜொஷ் ஹேசில்வூட் (2), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (2), அஸ்தன் அகரிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் அணித்தலைவர் தசுன் ஷானகவின் ஆட்டமிழக்காத 54 (25), சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 14 (10) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2-0-8-2, ஜொஷ் ஹேசில்வூட் 4-1-25-2, அஸ்தன் அகர் 4-0-23-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக ஷானகவும், தொடரின் நாயகனாக பின்ஞ்சும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .