2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

அஷ்வினின் சுழலில் தடுமாறுகிறது நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியின் மூன்றாம் நாளில், இரவிச்சந்திரன் அஷ்வினின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அணி, தடுமாறி வருகிறது.

விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்கள் என்ற நிலையை அடைந்தது. எனினும், பின்வரிசை வீரர்களின் போட்டித் தன்மையான துடுப்பாட்டத்தால், ஓரளவு போட்டித் தன்மையான நிலையை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மார்ட்டின் கப்டில் 72, ஜேம்ஸ் நீஷம் 71, டொம் லேதம் 53, பி.ஜே வற்லிங் 23, மிற்சல் சான்ட்னெர் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தனது 20ஆவது 5 விக்கெட் பெறுதியைக் கைப்பற்றிய அஷ்வின், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரவீந்திர ஜடேஜா, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2 விக்கெட்டுகள், ரண் அவுட் முறையில் இழக்கப்பட்டன. இரண்டையும், அஷ்வினே ஏற்படுத்தினார்.

இந்திய அணி தனது முதல் இனிங்ஸில் 557 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி, 258 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில், தனது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. அவ்வணி, 11 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர், தோட்பட்டையில் காயமடைந்து வெளியேறினார். இன்றைய நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 18 ஓட்டங்களை, அவ்வணி பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .