Shanmugan Murugavel / 2022 ஜனவரி 02 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக, றியாட் மஹ்ரேஸ், றொட்றி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஆர்சனல் சார்பாகப் பெற்ற கோலை புகாயோ ஸாகா பெற்றிருந்தார்.
இப்போட்டி முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சிற்றி உள்ளது. ஒரு போட்டி குறைவாக விளையாடிய செல்சி 42 புள்ளிகளுடன் இரண்டாமிடத்துடனும், இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடிய லிவர்பூல் 41 புள்ளிகளுடனும் மூன்றாமிடத்திலும், ஒரு போட்டி குறைவாக விளையாடிய ஆர்சனல் 35 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளன.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026