2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இங்கிலாந்துக்கு மீண்டும் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், லீட்ஸில் இடம்பெற்ற நான்காவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் அஸார் அலி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் எனத் தெரிவித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. அஸார் அலி 80, இமாட் வஸீம் ஆட்டமிழக்காமல் 57(41) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் ரஷீட் மூன்று, மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 48 ஓவர்களில், ஆறு விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் 69(70), ஜொனி பெயார்ஸ்டோ 61(83), மொயின் அலி ஆட்டமிழக்காமல் 45(48) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் இர்ஃபான் இரண்டு, உமர் குல், இமாட் வஸீம், ஹஸன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக ஜொனி பெயார்ஸ்டோ தெரிவானார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .