Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் சேர்க்கப்படவில்லை.
அண்மைக்காலமாக தோட்பட்டை உபாதை காரணமாக அவதிப்பட்டுவரும் ஜேம்ஸ் அன்டர்சன், இத்தொடரின் முதலாவது போட்டியில் மாத்திரம் பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது உபாதை, இன்னமும் குணமடையாததன் காரணமாக, டிசெம்பர் மாதம் வரை, அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, டிசெம்பர் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நான்காவது போட்டியே, ஜேம்ஸ் அன்டர்சன் பங்குபற்றுவதற்கு வாய்ப்புகளுள்ள போட்டியாகும்.
அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குழாமில், பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 11 பேருடன், வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டீவன் ஃபின், ஜேக் போல், துடுப்பாட்ட வீரர் ஹசீப் ஹமீட், சுழற்பந்து வீச்சாளர் ஸபார் அன்சாரி, விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர், நவம்பர் 9ஆம் திகதி, ராஜ்கொட்டில் ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழாம்: அலஸ்டெயர் குக், மொய்ன் அலி, ஜபார் அன்சாரி, ஜொனி பெயர்ஸ்டோ, ஜேக் போல், கரி பலன்ஸ், கரித் பற்றி, ஸ்டுவேர்ட் ப்ரோட், ஜொஸ் பட்லர், பென் டக்கெற், ஸ்டீவன் ஃபின், ஹசீப் ஹமீட், அடில் றஷீட், ஜோ றூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago