2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், ஸ்வான்சீ சிற்றி அணிக்கெதிரான போட்டியில் லிவர்பூல் அணி வெற்றிபெற்றது. டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் - செல்சி, வெஸ்ட் ஹாம் யுனைட்டட் - வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், நோர்விச் சிற்றி - ஆர்சனல் போட்டிகள், சமநிலையில் முடிவடைந்தன.

லிவர்பூல் - ஸ்வான்சீ சிற்றி போட்டியில், முதற்பாதியில் கோல்களெவையும் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்காத நிலையில், 62ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய ஜேம்ஸ் மில்னர், அதைக் கோலாக்கி, லிவர்பூல் அணிக்கு 1-0 என்ற முன்னிலையை வழங்கினார். அதுவே, வெற்றிக் கோலாகவும் அமைந்தது.

டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் - செல்சி போட்டி, கோல்களெவையும் பெறப்படாது, சமநிலையில் முடிவடைந்தது.
வெஸ்ட் ஹாம் யுனைட்டட் - வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.போட்டியின் 17ஆவது நிமிடத்தில், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியின் மாரோ ஸரட்டே பெற்ற கோலினால், 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த அவ்வணி, இரண்டாவது பாதியில், போட்டியின் 50ஆவது நிமிடத்தில், வின்ஸ்டன் றெய்ட் பெற்ற 'ஒவ்ண் கோல்" காரணமாக, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

நோர்விச் சிற்றி - ஆர்சனல் போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.போட்டியின் 30ஆவது நிமிடத்தில், ஆர்சனலின் மெசூட் ஓஸில் பெற்ற கோலினால் 1-0 என ஆர்சனல் முன்னிலை வகித்த போதிலும், 43ஆவது நிமிடத்தில் லூயிஸ் கிரபன் பெற்ற கோலினால், 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கோல்கள் பெறப்படாத நிலையில், இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .