Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 29 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, சிட்னியில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, டேவிட் வோணரின் 83 (77), அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்சின் 60 (69) ஓட்டங்கள் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றது.
பின்னர், ஸ்டீவ் ஸ்மித்தின் 104 (64), மர்னுஸ் லபுஷைனின் 70 (61) ஓட்டங்கள் மூலம் வேகமாகத் தொடர்ந்தும் ஓட்டங்களைக் குவித்த அவுஸ்திரேலியா, இறுதியில் கிளென் மக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டமிழக்காத 63 (29) ஓட்டங்களுடன் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 390 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா சார்பாக, மாயங் அகர்வால் 28 (26), ஷீகர் தவான் 30 (23), அணித்தலைவர் விராட் கோலி 89 (87), ஷ்ரேயாஸ் ஐயர் 38 (36), லோகேஷ் ராகுல் 76 (66), ஹர்டிக் பாண்டியா 28 (31), இரவீந்திர ஜடேஜா 24 (11) ஓட்டங்கள் என ஆரம்பங்களைப் பெற்றபோதும் எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், அடம் ஸாம்பா, மொய்ஸஸ் ஹென்றிக்கஸிடம் குறிப்பிட்ட இடைவேளைகளில் 3, 2, 2, 1 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்களையே பெற்று 51 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவானார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago