2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

இந்தியக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையே இந்தியாவில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியின் டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குழாமாகவே இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற டெஸ்ட் குழாமிலிருந்த 17 பேரில், சகலதுறை வீரர் ஸ்டூவர்ட் பின்னி, வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கர் ஆகியோரே குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குழாமில், புதிதாக எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 22ஆம் திகதி கான்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

குழாம்: விராத் கோலி (தலைவர்), அஜின்கியா ரகானே, இரவிச்சந்திரன் அஷ்வின், ஷீகர் தவான், இரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், அமித் மிஷ்ரா, மொஹமட் ஷமி, சட்டேஸ்வர் புஜாரா, லோகேஷ் ராகுல், ரித்திமான் சகா, இஷாந் ஷர்மா, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ்  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .