2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய சூரியகுமார் யாதவ்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் சூரியகுமார் யாதவ் முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது போட்டியில் 76 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை சூரியகுமார் யாதவ் அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. சூரியகுமார் யாதவ், 3. மொஹமட் றிஸ்வான், 4. ஏய்டன் மார்க்ரம், 5. டேவிட் மலான், 6. ஆரோன் பின்ஞ், 7. டெவோன் கொன்வே, 8. பதும் நிஸங்க, 9. நிக்கலஸ் பூரான், 10. மார்டின் கப்தில்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜொஷ் ஹேசில்வூட், 2. தப்ரையாஸ் ஷம்சி, 3. ரஷீட் கான், 4. அடில் ரஷீட், 5. அடம் ஸாம்பா, 6. அகீல் ஹொஸைன், 7. வனிடு ஹஸரங்க, 8. புவ்னேஷ்வர் குமார், 9. அன்றிச் நொர்ட்ஜே, 10. மகேஷ் தீக்‌ஷன.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. மொயின் அலி, 4. கிளென் மக்ஸ்வெல், 5. றொஹான் முஸ்தபா.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .