Editorial / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட்களுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட், அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்டைத் தொடர்ந்தே வெளியிடப்பட்ட தரவரிசையிலேயே, முன்னர் மூன்றாமிடத்திலிருந்த வில்லியம்சன் ஒரு இடம் முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 228 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே குறித்த அடைவை வில்லியம்சனால் அடைய முடிந்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 37 ஓட்டங்களையே பெற்ற இந்திய அணித்தலைவர் விராத் கோலி புள்ளிகளை இழந்துள்ள நிலையில், வில்லியம்சனுக்கும் கோலிக்குமிடையில் ஏழு புள்ளிகள் வித்தியாசமே காணப்படுகிறது. ஆகவே, தனது முதலாமிடத்தைத் தக்க வைப்பதற்கு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் சிறப்பான பெறுபேறுகளை கோலி வெளிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 194 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் செட்டேஸ்வர் புஜாரா, ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 127 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் ஹென்றி நிக்கொல்ஸ், 17ஆவது இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இதுதவிர, நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 139 ஓட்டங்களைப் பெற்ற அஸார் அலி, இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அந்தவகையில், முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, டெஸ்ட்களுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அணியின் சுழற்பந்துவீச்ச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின், ஏழாமிடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago