Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொஸைன் முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை ஹொஸைன் அடைந்துள்ளார்.
இதேவேளை, குறித்த போட்டிகளில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய மே. தீவுகளின் இன்னொரு சுழற்பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி, 13ஆம் இடத்திலிருந்து 10 இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்குறித்த போட்டிகளில் 84 ஓட்டங்களைப் பெற்ற மே. தீவுகளின் நிக்கலஸ் பூரான், 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் 88 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஹரி ப்ரூக், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில், பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 222 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் மொஹமட் றிஸ்வான், 17ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
4 hours ago
9 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
07 Feb 2026
07 Feb 2026