Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் பற் கமின்ஸ் முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை குறித்த டெஸ்டில் 180 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் ட்ரெவிஸ் ஹெட், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர இப்போட்டியில் 178 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் காரி, 15ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்கூறப்பட்ட டெஸ்டில் 61 ஓட்டங்களைப் பெற்றதோடு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை தென்னாபிரிக்காவுக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 73 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் திலக் வர்மா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago