Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 06 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்ட் போட்டிகளை இரண்டு பிரிவாக மாற்றும் திட்டத்துக்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இவ்விடயம் தொடர்பான கவனம், மேலும் அதிகரித்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளை இரண்டு பிரிவுகளாக்கி, அவற்றில் முதற்பிரிவில் முதல் 7 அணிகளும், இரண்டாவது பிரிவில் 5 (அல்லது வேறு எண்ணிக்கையான) அணிகள் விளையாடும் திட்டமொன்று தொடர்பாகப் பரிசீலிக்கப்படுகிறது.
ஆனால், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகள், இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், சிறிய நாடுகளை இது பாதிக்குமெனத் தெரிவித்து, இந்தியாவும் இத்திட்டத்தை எதிர்க்கிறது.
ஆனால், வீரர்களின் சம்மேளனத்தின் வருடாந்த கருத்துக்கணிப்பின்படி, 72 சதவீதமான வீரர்கள், இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
தவிர, 52 சதவீதமான வீரர்கள், தங்கள் நாட்டுக்காக விளையாடுவதற்குப் பதிலாக, உள்ளூர் இருபதுக்கு-20 தொடரொன்றில் விளையாடுவதைப் பரிசீலிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026