Shanmugan Murugavel / 2016 நவம்பர் 10 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் சிற்றி அணியின் தலைவர் வின்சென்ட் கொம்பனி, தனது நாடான பெல்ஜியம் அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான போட்டியிலிருந்து, இறுதி நேரத்தில் விலகியிருந்தார்.
புதன்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில், கொம்பனி பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், இறுதி நேரத்திலேயே அவர் விலகியிருந்தார். அப்போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
அவருக்கு உபாதை ஏதும் ஏற்பட்டிருக்காத போதிலும், போட்டிக்கு முன்னைய பயிற்சிகளைத் தொடர்ந்து, உச்ச உடற்றகுதியோடு இருப்பதாக அவர் உணராத காரணத்தாலேயே, போட்டியிலிருந்து விலகியதாக அறிவிக்கப்படுகிறது.
30 வயதான கொம்பனி, அண்மைக்காலத்தில் அதிக காயங்களைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago