Editorial / 2018 நவம்பர் 08 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாவது நாளில் வெற்றியை நோக்கி பயணித்த வண்ணம் இங்கிலாந்து காணப்படுகிறது.
இன்றைய மூன்றாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இங்கிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தி, இலங்கைக்கு இரண்டாவது இனிங்ஸில் 462 ஓட்டங்களை வெற்றியிலக்காக வழங்கியுள்ளது.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 342/10 (துடுப்பாட்டம்: பென் போக்ஸ் 107, சாம் கர்ரன் 48, கீட்டன் ஜெனிங்ஸ் 46, அடில் ரஷீட் 35, ஜோ றூட் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 5/75, சுரங்க லக்மால் 3/73)
இலங்கை: 203/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 52, தினேஷ் சந்திமால் 33, நிரோஷன் டிக்வெல்ல 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 4/66, அடில் ரஷீட் 2/30, ஜேக் லீச் 2/41)
இங்கிலாந்து: 322/6 (துடுப்பாட்டம்: கீட்டன் ஜெனிங்ஸ் ஆ.இ 146, பென் ஸ்டோக்ஸ் 62, பென் போக்ஸ் 37, ஜொஸ் பட்லர் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 2/59, டில்ருவான் பெரேரா 2/94)
இலங்கை: 15/0
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026