Editorial / 2017 ஜூலை 04 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சனத் ஜயசூரிய தலைமையிலான, இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழு, மேலும் ஆறு மாதங்களுக்கு இருக்கும் என, இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், இவ்வாண்டு இறுதி வரைக்கும், தற்போதுள்ள தேர்வாளர் குழுவே இருக்கவுள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, தலைமைத் தேர்வாளராக, கடமையாற்றியவராக ஜயசூரிய மாறவுள்ளார்.
2013ஆம் ஆண்டு பெப்ரவரியில் பதவியேற்றிருந்த ஜயசூரிய, 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண மோசமான பெறுபேற்றைத் தொடர்ந்து, பிரதியீடு செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு உலக இருபதுக்கு - 20க்கு பின்னர் மீண்டும் பதவியேற்றிருந்தார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க, முன்னாள் வீரர்களான றொமேஷ் களுவிதாரண, ரஞ்சித் மதுரசிங்க, எரிக் உபஷாந்த ஆகியோர், தேர்வாளர் குழுவில் தொடருகின்றனர்.
13 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
1 hours ago