Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான தற்காலிக அணித்தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்க வீசாவைப் பெறுவதற்கு தாமதமாகின்றமை காரணமாக இத்தொடருக்கு அணித்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ள தசுன் ஷானக, இன்னும் அணியுடன் இணையாத நிலையிலேயே குறித்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
ஷானக இன்னும் வீசாவைப் பெறாத நிலையில் குறித்த தொடரை அவர் முழுமையாகத் தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு அவர் திரும்ப எதிர்பார்க்கின்றார்.
ஐந்து ஆண்டுகளுக்கு வலிதான ஐ. அமெரிக்க வீசாவை ஷானக கொண்டிருந்தபோதும், அந்தக் கடவுச்சீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தொலைத்திருந்தார்.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026