2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கையை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 01 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலியா வென்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இன்றைய மூன்றாம் நாள் காலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 321 ஓட்டங்களைப் பெற்றது. இன்று காலையில் வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் அசித பெர்ணாண்டோ வீழ்த்திருந்தார்.

பதிலுக்கு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நேதன் லையன் (4), ட்ரெவிஸ் ஹெட் (4), மிற்செல் ஸ்வப்ஸனிடம் (2) தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில், ஐந்து ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக கமரொன் கிறீன் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 212/10 (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல 58, அஞ்சலோ மத்தியூஸ் 39, திமுத் கருணாரத்ன 28, பதும் நிஸங்க 23, ரமேஷ் மென்டிஸ் 22, தனஞ்சய டி சில்வா 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/90, மிற்செல் ஸ்வப்ஸன் 3/55, பற் கமின்ஸ் 1/25, மிற்செல் ஸ்டார்க் 1/31)

அவுஸ்திரேலியா: 321/10 (துடுப்பாட்டம்: கமரொன் கிறீன் 77, உஸ்மான் கவாஜா 71, அலெக்ஸ் காரி 45, பற் கமின்ஸ் 26, டேவிட் வோர்னர் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரமேஷ் மென்டிஸ் 4/112, அசித பெர்ணாண்டோ 2/37, ஜெஃப்ரி வன்டர்சே 2/68, தனஞ்சய டி சில்வா 1/8)

இலங்கை: 113/10 (பந்துவீச்சு: நேதன் லையன் 4/31, ட்ரெவிஸ் ஹெட் 4/10, மிற்செல் ஸ்வப்ஸன் 2/34)

அவுஸ்திரேலியா: 10/0

போட்டியின் நாயகன்: கமரொன் கிறீன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X