Shanmugan Murugavel / 2021 ஜூன் 24 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கார்டிஃப்பில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குஷல் பெரேரா தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்திலிருந்தே சாம் கர்ரன் (2), கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், மார்க் வூட், அடில் ரஷீட்டிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில், தசுன் ஷானகவின் 50 (44), குஷல் பெரேராவின் 30 (26) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 130 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜேஸன் றோய், ஜொஸ் பட்லர் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றதுடன், றோயை 36 (22), டேவிட் மலனை டுஷ்மந்த சமீர, இசுரு உதானவிடம் இழந்தது.
எனினும், ஜொஸ் பட்லரின் ஆட்டமிழக்காத 68 (55) ஓட்டங்களுடன் 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை இங்கிலாந்து அடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பட்லர் தெரிவானார்.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026