Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் அண்மைய இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது நட்சத்திர பெறுபேறுகளை வெளிப்படுத்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோ, அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமில் இடம்பிடித்துள்ளார். இது தவிர, தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கையின் வளர்ச்சியடைந்து வரும் அணிகளுக்காக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அமில அபோன்ஸோவும் குழாமில் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை, அண்மைய இங்கிலாந்துத் தொடருக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்ட சகலதுறை வீரர்கள் மிலிந்த சிரிவர்தன, திஸார பெரேரா ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இங்கிலாந்துத் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்காத திலகரட்ன டில்ஷானும் குழாமில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்துத் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக, ஃபர்வீஸ் மஹரூஃப், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ், வேகப்பந்துவீச்சாளர் சமிந்த பண்டார ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா, சுழற்பந்துவீச்சாளர்கள் டில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகன் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளார். குழாமில் வேகப்பந்துவீச்சாளராக சுரங்க லக்மால் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
இத் தொடரின் முதலாவது போட்டி, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (21) ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.
குழாம்: அஞ்செலோ மத்தியூஸ், திலகரட்ன டில்ஷான், தனுஷ்க குணதிலக, தினேஷ் சந்திமால், குஷால் பெரேரா, குஷால் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, மிலிந்த சிரிவர்தன, சீக்குகே பிரசன்னா, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், திஸார பெரேரா, டில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகன், அவிஷ்க பெர்ணான்டோ, அமில அப்போன்ஸோ
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026