Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் பெண்கள் அணிக்கும் அவுஸ்திரேலியப் பெண்கள் அணிக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, 24.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 38 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, இனோக்கா ரணவீரவின் ஆட்டமிழக்காத 32 (43) ஓட்டங்களின் துணையோடே, 50 ஓட்டங்களைக் கடந்தது. தவிர, இஷானி கௌஷல்யா பெற்ற 14 ஓட்டங்களே, அடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக அமைந்தன. பந்துவீச்சில் ஹோலி பேர்லிங், கிறிஸ்டன் பீம்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் மேகன் ஸ்கட், எரின் ஒஸ்போர்ண் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
77 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியடைந்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவி மெக் லனிங், 27 (21), நிக்கோல் பொல்ட்டன் 19 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இனோக்கா ரணவீர, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இத்தொடரின் அடுத்த போட்டி, செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
6 minute ago
9 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
53 minute ago
1 hours ago