Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா, அயர்லாந்து ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளதுடன், சிம்பாப்வே சுப்பர் – 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
பல்லேகலவில் தொடர்ச்சியான மழை காரணமாக சிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான குழு பி போட்டி கைவிடப்பட்டதையடுத்தே ஏற்கெனவே ஓமான், அவுஸ்திரேலியாவை வென்ற சிம்பாப்வே ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே குழுவிலிருந்து இலங்கைக்கு அடுத்ததாக இரண்டாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
மறுபக்கமாக சிம்பாப்வே, இலங்கையிடம் தோல்வியடைந்திருந்த அவுஸ்திரேலியாவும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த அயர்லாந்தும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
43 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
14 Apr 2026