Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 நவம்பர் 14 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி சம்பியனாக தெரிவாகியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் 85(48), மாட்டின் கப்டில் 28(35) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜோஸ் ஹேசல்வூட் (3), அடம் சம்பா (1) விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டத்தில் மிச்செல் மார்ஷ் 77(50), டேவிட் வோணர் 53(38), கிளேன் மக்ஸ்வெல் 28(18) ஓட்டங்களை பெற்றதுடன், நியூசிலாந்து பந்து வீச்சில் ட்ரென்ட் போல்(2) விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
4 minute ago
20 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
53 minute ago
1 hours ago