Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மே 30 , மு.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது, பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் தென்னாபிரிக்காவை, தொடரை நடாத்தும் நாடான இங்கிலாந்து, இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் எதிர்கொள்வதுடன் ஆரம்பிக்கின்றது.
அந்தவகையில், உலகக் கிண்ணத்தை இம்முறை கைப்பற்றக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்ட அணியாக இங்கிலாந்து விளங்குவதுடன், அதற்கடுத்த அதிக வாய்ப்புகள் கொண்ட அணியாக இந்தியா இருப்பதுடன், இப்பட்டியலில் அண்மைய போட்டிகளில் எழுச்சி பெற்று அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
இதுதவிர, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகியவையும் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய ஓரளவு வாய்ப்புகளைக் கொண்ட அணிகளாகக் காணப்படுவதுடன், இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட அணிகளுக்கு கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் சவால் விடுக்கக்கூடிய அணியாக மேற்கிந்தியத் தீவுகளும் உருவெடுத்து நிற்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில், இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவதானிக்கப்பட வேண்டியவர்களாக இந்திய அணித்தலைவர் விராத் கோலி, வேகப்பந்துவீச்சாளர் விராத் கோலி, இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர், தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர்கள் ககிஸோ றபாடா, லுங்கி என்கிடி, அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸ், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். இவர்களின் பெறுபேறுகளே அந்தந்த அணிகளது பெறுபேறுகளை தீர்மானிப்பவையாக விளங்கப் போகின்றன.
இதேவேளை, இந்த உலகக் கிண்ணத் தொடரின்போது 500 ஓட்டங்கள் குவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுதுவதுக்கில்லை. ஏனெனில் அவ்வாறானதாக தட்டையானதாக, துடுப்பாட்டவீரர்களுக்குச் சாதமானதாகவே ஆடுகளங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், காலம் காலமாகக் கூறப்படுவது போன்று போட்டியொன்றில் வெல்வதற்கு துடுப்பாட்டவீரர்கள் உதவினாலும், தொடரொன்றை வெல்லுவதற்கு பந்துவீச்சாளர்களே முக்கியம் என்ற நிலையில், சிறந்த பந்துவீச்சு திறமைகளை வெளிப்படுத்தும் அணி கிண்ணத்தைக் கைப்பற்றினால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago