2025 மே 19, திங்கட்கிழமை

உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தமைக்கு இப்படியொரு காரணமா?

J.A. George   / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் நெருங்கி வருவதனை அடுத்து, அதில் பங்கெடுக்கும் அணிகள் அங்கே தமது வீரர்களை அனுப்பி வருகின்றன. 

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியும் தங்களது வீரர்களை கட்டம் கட்டமாக மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பி வருகின்றது.

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த அதிரடி துடுப்பாட்டவீரர் சிம்ரோன் ஹெட்மேயர் கடந்த சனிக்கிழமை (01) அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

பின்னர் இந்த விமானம் ஹெட்மேயரின் வேண்டுகோளுக்கு அமைய திங்கட்கிழமைக்கு (03) மாற்றப்பட்டது. எனினும், தனிப்பட்ட காரணங்களால்  அந்த விமானத்தையும் ஹெட்மேயர் தவறவிட்டிருக்கின்றார்.

இந்த நிலையில் அவரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை, உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கி, அவருக்குப் பதிலாக சமார் புரூக்ஸிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X