2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

எஞ்சிய பருவகாலத்தை தவறவிடும் மட்டிப்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் பின்களவீரரான ஜோயல் மட்டிப், கணுக்கால் காயமொன்று காரணமாக எஞ்சிய பருவகாலத்தை தவறவிடவுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸுக்கெதிரான போட்டியிலேயே மட்டிப் காயமடைந்திருந்தார்.

அந்தவகையில், லிவர்பூலின் காயமடைந்த பின்களவீரர்களான வேர்ஜில் வான் டிஜிக், ஜோ கொமெஸ்ஸுடன் மட்டிப் இணைகின்றார்.

இந்நிலையில், ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான ஷல்கேயின் பின்களவீரரான ஒஸன் கபாக்கை கடனடிப்படையிலும், இங்கிலாந்து சம்பியன்ஷிப் கழகமான பிறஸ்டன் நொர்த் என்டின் பின்களவீரரான பென் டேவிஸையும் லிவர்பூல் கைச்சாத்திட்டுள்ளது.

மத்தியகளவீரர்களான பேபின்ஹோ, அணித்தலைவர் ஜோர்டான் ஹென்டர்சனை பின்களவீரர்களாக லிவர்பூல் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .