Shanmugan Murugavel / 2021 ஜூலை 14 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனால் கைச்சாத்திடப்படுவதை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான ஒலிவியர் ஜிரூட் நெருங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏ.சி மிலனுடன் இரண்டாண்டு ஒப்பந்தத்தில் 34 வயதான ஜிரூட் இவ்வார முடிவில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு செல்சியில் இணைந்த ஜிரூட், கடந்த மாதம் தனது ஒப்பந்தத்தை அடுத்தாண்டு வரை நீடித்திருந்தார்.
செல்சிக்காக 119 போட்டிகளில் விளையாடி 39 கோல்களை ஜிரூட் பெற்றிருந்தார்.
கடந்த பருவகாலத்தில் கை ஹவேர்ட்ஸ், திமோ வேர்னரை செல்சி கைச்சாத்திட்டிருந்த நிலையில், கடந்த பிறீமியர் லீக் பருவகாலத்தில் எட்டுப் போட்டிகளையே ஜிரூட் ஆரம்பித்திருந்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago