2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

ஐ.அ. அமீரகத்தில் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளை உள்ளடங்கிய தொடரொன்றில் ஆப்கானிஸ்தானும், இலங்கையும் மார்ச்சில் விளையாடவுள்ளன.

ஷாஜாவில் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளதுடன், டுபாயில் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் முடிந்து  ஐந்து நாள்களில் இருபதுக்கு – 20 போட்டித் தொடர் ஆரம்பிக்கவுள்ளதுடன், ஒருநாள் தொடரானது இந்தியன் பிறீமியர் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்பதாகவே முடிவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .