Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 04 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தாவின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, சுனில் நரைனின் 85 (39), அங்க்ரிஷ் ரகுவன்ஷியின் 54 (27), அன்ட்ரே ரஸலின் 41 (19), ரிங்கு சிங்கின் 26 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, ரகுவன்ஷிக்குப் பதிலாக தாக்க்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய வைபவ் அரோரா (3), மிற்செல் ஸ்டார்க் (2), வருண் சக்கரவர்த்தி (3), நரைன், ரஸலிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களையே 106 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக நரைன் தெரிவானார்.
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026