Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 30 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லியின் அணித்தலைவர் றிஷப் பண்ட், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி, ஆரம்பத்திலிருந்தே வைபவ் அரோரா (2), மிற்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா (2), வருண் சக்கரவர்த்தி (3), சுனில் நரைனிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் குல்தீப் யாதவ்வின் ஆட்டமிழக்காத 35 (26) ஓட்டங்களால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 154 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, பில் ஸோல்டின் 68 (33) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்று சுனில் நரைனையும், அவரையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இழந்திருந்தது. பின்னர் ரிங்கு சிங்கும் லிஸார்ட் வில்லியம்ஸிடம் வீழ்ந்தபோதும் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 33 (23), வெங்கடேஷ் ஐயரின் ஆட்டமிழக்காத 26 (23) ஓட்டங்களோடு 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தெரிவானார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago