Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 மே 19 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு குஜராத் டைட்டான்ஸ், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகியன தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளன.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் குஜராத் வென்றதைத் தொடர்ந்தே இம்மூன்று அணிகளும் தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன.
தலா இரண்டு போட்டிகள் மீதமிருக்கையில் குஜராத் 18 புள்ளிகளுடனும், பெங்களூரு 17 புள்ளிகளுடனும், பஞ்சாப் 17 புள்ளிகளுடனும் காணப்படுகின்றன. மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடன், டெல்லி கப்பிட்டல்ஸும் தலா இரண்டு போட்டிகள் மீதமிருக்கையில் 14, 13 புள்ளிகளுடன் காணப்படுகின்றன. அதில் மும்பைக்கும், டெல்லிக்குமிடையிலான போட்டியொன்று காணப்படுகின்ற நிலையில் அதிகபட்சமாக 17 புள்ளிகளையே இரண்டிலொன்று பெற முடியுமென்ற நிலையிலேயே குஜராத், பெங்களூரு, பஞ்சாப் தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது.
மேற்குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட டெல்லி, லோகேஷ் ராகுலின் ஆட்டமிழக்காத 112 (65) அபிஷேக் பொரேலின் 30 (19), அணித்தலைவர் அக்ஸர் பட்டேலின் 25 (16), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் ஆட்டமிழக்காத 21 (10) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அர்ஷாட் கான் 2-07-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 200 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய குஜராத், சாய் சுதர்ஷனின் ஆட்டமிழக்காத 108 (61), ஷுப்மன் கில்லின் ஆட்டமிழக்காத 93 (53) ஓட்டங்களோடு 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக சுதர்ஷன் தெரிவானார்.
இதேவேளை ஜெய்ப்பூரில் நடைபெற்ற மற்றைய போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
4 minute ago
6 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
20 minute ago
32 minute ago