Shanmugan Murugavel / 2024 ஜூலை 24 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

2024 பரிஸ் ஒலிம்பிக்கையடுத்து டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பிரித்தானியாவின் அன்டி மரே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடத் திட்டமிட்டுள்ள 37 வயதான மரே, ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
முதன்முறையாக 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் விளையாடிய மரே, 2012ஆம் ஆண்டு றோஜர் பெடரரை வென்று தங்கப் பதக்கத்தை வென்றதுடன், 2016ஆம் ஆண்டு றியோவிலும் தங்கப் பதக்கத்தை வென்று இரண்டு ஒலிம்பிக் தனிநபர் தங்கப் பதக்கங்களை வென்ற முதலாவது வீரராக தனது பெயரைப் பதிந்திருந்தார்.
இரண்டு தடவைகள் விம்பிள்டன் பட்டத்தை மரே கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jan 2026