Shanmugan Murugavel / 2016 ஜூன் 30 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாதனை நாயகனாக ஐக்கிய அமெரிக்காவின் நீச்சல் வீரரான மைக்கல் ஃபெல்ப்ஸ், றியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம், மேலும் பல சாதனைகளை அவர் படைப்பாரென்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.
2000ஆம் ஆண்டு சிட்னியில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 15 வயது இளைஞனாகத் தகுதிபெற்ற ஃபெல்ப்ஸ், அந்த ஒலிம்பிக்கில் பதக்கமெதனையும் பெறாத போதிலும், 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர், தனது திறமைகளை வெளிக்காட்டத் தொடங்கிய அவர், இதுவரை 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி, 18 தங்கங்கள் உட்பட 22 பதக்கங்களைப் பெற்றுள்ளார். இது, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள், அதிக தங்கங்கள் ஆகியவற்றுக்கான சாதனையாகும்.
இந்நிலையில், அமெரிக்காவின் தகுதிகாண் போட்டிகளில் 200 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டிகளில் தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம், தனது 5ஆவது ஒலிம்பிக்கில் பங்குபெறவுள்ளார்.
2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கோடு ஓய்வுபெறுவதாக அறிவித்த ஃபெல்ப்ஸ், பின்னர் குடித்துவிட்டு வாகனமோட்டியமைக்காகக் கைது செய்யப்பட்டுமிருந்தார். எனினும், அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ள அவர், மேலும் அதிக பதக்கங்களைப் பெறும் எதிர்பார்ப்புடன் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago