2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஒ.நா.ச.போ.தொடரில் சாதிக்குமா இலங்கை?

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், நாளை ஆரம்பிக்கவுள்ளது. தர்மசாலாவில் இடம்பெறவுள்ள இப்போட்டி, காலை 11.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில், இரண்டாவது போட்டியைத் தவிர, ஏனைய இரு போட்டிகளிலும் இலங்கை அணி ஓரளவுக்குப் போராடியிருந்த நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் எவ்வாறு விளையாடுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக, வழக்கமான தலைவரான உபுல் தரங்கவுக்குப் பதிலாக, புதிய தலைவராக திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தலைமைத்துவமும் தனிப்பட்ட பெறுபேறுகளும் எவ்வாறிருக்கும் என்பது, கூர்ந்து கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும். அதேபோல், தலைமைத்துவத்திலிருந்து நீக்கப்பட்ட தரங்க, விளையாடும் பதினொருவரில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் உள்ளது.

அத்தோடு, குசல் பெரேராவின் மீள்வருகை, இலங்கைக்குப் பலத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், வழக்கமான அணித்தலைவர் விராத் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X