Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
விம்பிள்டன் போட்டிகளில் இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற, செக் குடியரசைச் சேர்ந்த பெட்ரா குவிற்றோவா, ஆகக்குறைந்தது 6 மாதங்களுக்கு, டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. கத்திக்குத்தொன்றின் விளைவாக, அவரது மணிக்கட்டில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
26 வயதான குவிற்றோவாவின் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவமொன்றின் போதே, கொள்ளையர் என நம்பப்படும் ஒருவருடன், குவிற்றோவா மோதியுள்ளார். அப்போதே, அவரது கையில், இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நான்கு மணிநேரங்கள் நீடித்த சத்திரசிகிச்சையில், அவரது இடது கையில் உள்ள நரம்புகளும் தசைநாண்களும், சீர்செய்யப்பட்டன. அவருக்கு ஏற்பட்ட காயத்தைக் கருத்திற்கொள்ளும் போது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை, மிகவும் திருப்திகரமாக இடம்பெற்றத என, குவிற்றோவாவின் பேச்சாளர் தெரிவித்தார்.
சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து, 6 தொடக்கம் 8 வாரங்களுக்கு, அவரது கையில் கட்டுப் போடப்பட்டிருக்கும் என்பதோடு, காயமடைந்த கையில், குறைந்தது 6 மாதங்களுக்கு, பாரங்களைத் தூக்க முடியாது என அறிவிக்கப்படுகிறது.
உலகின் 11ஆம் நிலை வீராங்கனையான குவிற்றோவா, 2011ஆம், 2014ஆம் ஆண்டுகளில் விம்பிள்டன் சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
19 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
22 minute ago
34 minute ago