Shanmugan Murugavel / 2025 மே 26 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) தொடரில் லாகூர் குவாலான்டர்ஸ் சம்பியனானது.
லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற குவாட்டா கிளாடியேட்டர்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே குவாலான்டர்ஸ் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளாடியேட்டர்ஸ், ஹஸன் நவாஸின் 76 (43), அவிஷ்க பெர்ணாண்டோவின் 29 (22), பாஹீம் அஷ்ரப்பின் 28 (08), றைலி றொஸோவின் 22 (11), தினேஷ் சந்திமாலின் 22 (13) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் ஷகீன் ஷா அஃப்ரிடி 4-0-24-3 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 202 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய குவாலன்டர்ஸ், குசல் பெரேராவின் ஆட்டமிழக்காத 62 (31), மொஹமட் நயீமின் 46 (27), அப்துல்லாஹ் ஷஃபிக்கின் 41 (28), சிகண்டர் ராசாவின் ஆட்டமிழக்காத 22 (07) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் அப்ரார் அஹ்மட் 4-0-27-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக குசல் பெரேராவும், தொடரின் நாயகனாக ஹஸன் நவாஸும் தெரிவாகினர்.
4 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago