Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 26 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற வில்லாறியலுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் சமப்படுத்தியது.
வில்லாறியல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெரார்ட் மொரேனோ பெற்றதோடு, மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாமுவேல் லினோ பெற்றிருந்தார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 49 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் காணப்படுகின்றது. 45 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் காணப்படுகின்றது. தலா 39 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம், நான்காமிடங்களில் பார்சிலோனாவும், அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றன. இதில் ஏனைய அணிகளை விட றியல் மட்ரிட்டும், அத்லெட்டிகோ மட்ரிட்டும் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
28 minute ago
27 Jun 2025