Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 20 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.
ஆர்சனல் சார்பாக புகாயோ ஸாகா, பியர்ரோ ஹின்கபி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வொல்வ்ஸ் சார்பாக ஹியூகோ புயெனோ ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 58 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 53 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 50 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அஸ்தன் வில்லாவும், 45 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட ஆர்சனல் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago