Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் சமப்படுத்தியது.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற அஸ்டன் வில்லாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி தோற்றது.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 72 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 64 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி காணப்படுவதுடன், தலா 50 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம், நான்காமிடங்களில் நியூகாசில் யுனைட்டெட்டும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் காணப்படுகின்றன. இதில், சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளதுடன், நியூகாசில் இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளது.
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026