Shanmugan Murugavel / 2021 மே 10 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் பயிற்சி மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், செவில்லாவுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
மட்ரிட் சார்பாக, மார்கோ அஸென்ஸியோ, ஈடன் ஹஸார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செவில்லா சார்பாக, பெர்ணான்டோ, இவான் றகிட்டிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 77 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் காணப்படுகின்றது. நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும், பார்சிலோனாவும் தலா 75 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டிகளில் மேம்பட்ட முடிவு காரணமாக றியல் மட்ரிட் இரண்டாமிடத்திலும், பார்சிலோனா மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றன. 71 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லா காணப்படுகின்றது.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026