Shanmugan Murugavel / 2026 ஜனவரி 12 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், பியொரென்டீனாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற அவ்வணிக்கும் ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்தோபர் எங்குகு பெற்றதோடு, பியொரென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை பியட்ரோ கொமுஸோ பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் நாப்போலியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் சமப்படுத்தியது. இன்டர் சார்பாக பெடெரிக்கோ டிமர்கோ, ஹகன் கல்ஹனொக்லு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஸ்கொட் மக்டொமினி பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 43 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றது. 40 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும் காணப்படுகின்றது. நாப்போலியும், றோமாவும் தலா 39 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டிகளின் மேம்பட்ட முடிவு காரணமாக மூன்றாமிடத்தில் நாப்போலியும், நான்காமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட றோமா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago