Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் இன்று (17) அதிகாலை நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டுடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் சமப்படுத்தியது.
ஜுவென்டஸ் சார்பாக, டுஸன் விளாகோவிச் இரண்டு கோல்களையும், கெனன் யில்டிஸ், லொய்ட் கெல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டமுண்ட் சார்பாக கரிம் அடெயெமி, பீலிக்ஸ் நெமச்சா, யன் கூட்டோ, றமி பென்செபைனி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான மர்ஸெய்யுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிலியான் மப்பே பெற்றதோடு, மர்ஸெய் சார்பாகப் பெறப்பட்ட கோலை திமோதி வெயா பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிக் பில்பாவோவின் மைதானத்தில் நேற்றிரவு (16) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago