Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில் நோர்வேக் கழகமான பொடோ/ஜிலிம்டின் மைதானத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் தோற்றது.
இன்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியோ எஸ்பொஸிட்டோ பெற்றிருந்தார். பொடோ/ஜிலிம்ட் சார்பாக சொன்ட்ரே ப்ரூன்ஸ்டட் பெட், ஜென்ஸ் பீற்றர் ஹக், கஸ்பர் ஹோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயின் மைதானத்தில் நடைபெற்ற தமது முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் சமப்படுத்தியிருந்தது. அத்லெட்டிகோ சார்பாக ஜூலியன் அல்வரேஸ், அடெமோலா லுக்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. கிளப் ப்ரூகே சார்பாக றபெல் ஒன்யெடிகா, நிகொலோ ட்ரெஸொல்டி, கிறிஸ்டோஸ் தஸோலிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
19 minute ago
28 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
4 hours ago