2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

சிற்றியை பந்தாடிய ஆர்சனல்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

ஆர்சனல் சார்பாக, மார்டின் ஒடெஹார்ட், தோமஸ் பார்ட்டி, மைலெஸ் லூயிஸ்-ஸ்கெல்லி, கை ஹவேர்ட்ஸ், ஈதன் என்வனேரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை எலிங்க் பிறோட் ஹலான்ட் பெற்றிருந்தார்.

இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது. பலஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜீன்-பிலிப் மடெடா பெற்றிருந்தார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 56 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 47 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும் காணப்படுகின்றன. சிற்றி, நியூகாசில் யுனைட்டெட்டும் தலா 41 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் தமக்கிடையேயான போட்டி முடிவுகள் காரணமாக நான்காம், ஐந்தாம் இடங்களில் முறையே காணப்படுகின்றன. மற்றைய அணிகளை விட லிவர்பூல் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X