Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஒக்லன்டில் இன்று இடம்பெற்ற போட்டியில் 5 விக்கெட்டுகளால் நியூசிலாந்தை சாதனை ரீதியாக அவுஸ்திரேலியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 6 விகெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மார்ட்டின் கப்தில் 105 (54), கொலின் மன்றோ 76 (33) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கேன் றிச்சர்ட்ஸன் 2, அஸ்தன் அகர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 244 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், டார்சி ஷோர்ட் 76 (44), அணித்தலைவர் டேவிட் வோணர் 59 (24), ஆரோன் பின்ஞ் ஆட்டமிழக்காமல் 36 (14), கிளென் மக்ஸ்வெல் 31 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக டார்சி ஷோர்ட் தெரிவானார்.
அந்தவகையில், நியூசிலாந்து பெற்ற 243 ஓட்டங்களை துரத்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றதே, இருபதுக்கு - 20 போட்டிகளில் துரத்தி பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
27 minute ago
2 hours ago