Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை பாகிஸ்தான் வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஹராரேயில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஷோன் வில்லியம்ஸ், பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சார்பாக மொஹமட் றிஸ்வான் மாத்திரமே ஆட்டமிழக்காமல் 82 (61) ஓட்டங்களைப் பெற்றதோடு, ஏனையோர் பிளஸிங் முஸர்பனி (1), வெஸ்லி மட்ஹெவெரே (2), லுக் ஜொங்வியிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 150 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே சார்பாக, கிரேய்க் எர்வின் 34 (23), லுக் ஜொங்வி ஆட்டமிழக்காமல் 30 (23), தினஷே கமுன்குகம்வே 29 (35) ஓட்டங்களைப் பெற்றபோதும், உஸ்மான் குவாதிர் (3), மொஹமட் ஹஸ்னைன் (2), மொஹமட் ஹபீஸ் (1), ஹரிஸ் றாஃப்பிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக மொஹமட் றிஸ்வான் தெரிவானார்.
42 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago