Shanmugan Murugavel / 2021 நவம்பர் 23 , பி.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2020-21 பருவகாலத்துக்கான சிறந்த வீரர் விருதுப் பட்டியலில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் லியனல் மெஸ்ஸி, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருடன் கடந்தாண்டு வெற்றியாளரான றொபேர்ட் லெவன்டோஸ்கியும் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, இப்பட்டியலில் இங்கிலாந்து பிறீமியுர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலா, பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர்களான கிலியான் மப்பே மற்றும் நெய்மர், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் முன்களவீரரான எர்லிங்க் ஹலான்ட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான கெவின் டி ப்ரூனே, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான கரிம் பென்ஸீமா, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் மத்தியகளவீரர்களான ஜோர்ஜினியோ, என்கலோ கன்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சிறந்த கோல் காப்பாளருக்கான பட்டியலில் பரிஸ் ஸா ஜெர்மைனின் ஜல்லூயிஜி டொன்னருமா இடம்பெற்றுள்ளார்.
சிறந்த பயிற்சியாளருக்கான பட்டியலில், இத்தாலிய சர்வதேச கால்பந்தாட்ட அணியின் றொபேர்ட் மன்சினி, செல்சியின் தோமஸ் துஷெல், ஆர்ஜென்டீனாவின் லியனல் ஸ்கலோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
6 minute ago
15 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
29 minute ago